நான் 7 பேர் குறித்து தெரியாத முட்டாள் இல்லை : ரஜினிகாந்த்

சென்னை

மக்கு ராஜிவ் கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்து தெரியாத அளவு தாம் முட்டாள் இல்லை என ரஜினிகாந்த் கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் இரு தினங்களுக்கு முன்பு செய்தியாளர்கள் ராஜிவ் காந்தி கொலையாளிகள் 7 பேர் விடுதலை பற்றி கேட்டபோது யார் அந்த 7 பேர் எனக் கேட்டது கடும் சர்ச்சையை உண்டாக்கியது. சமூக வலைத் தளங்களில் பலரும் ரஜினிகாந்துக்கு நாட்டு நடப்பே தெரியவில்லை என்னும் ரீதியில் பதிவிட்டனர். நேற்று சென்னையில் தனது இல்லத்தில் ரஜினிகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார்.

அந்த சந்திப்பில் ரஜினிகாந்த், “சில பேர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் குறித்து ரஜினிகாந்துக்கு ஒன்றும் தெரியாது என்னும் மாயையை உருவாக்குகிறார்கள். நான் எனக்கு தெரிந்ததை தெரியும் என்பேன், தெரியாததை தெரியாது என்பேன். இதில் வெட்கப்பட ஏதுமில்லை.

அவர்கள் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் தண்டிக்கப்பட்ட 7 பேர் என சொல்லி இருந்தால் எனக்கு புரிந்திருக்கும். ஆனால் 7 பேர் என கேட்டதால் நான் எந்த 7 பேர் என கேட்டேன். இது இயற்கைதான். அதனால் நான் அந்த 7 பேர் யாரென தெரியாத முட்டாளிலை. பேரறிவாளன் அரோலில் வந்த போது இந்த ரஜினிகாந்த் போனில் பத்து நிமிடத்துக்கு மேல் பேசி ஆறுதல் சொல்லி இருக்கிறான்.

ராஜிவ் காந்தி கொலை வழக்கு பல இடங்களுக்கு சென்று தற்போது ஆளுநரிடம் சென்றுள்ளது. ஆளுநர் அது குறித்து முடிவெடுத்து அவர்களை விடுதலை செய்ய வேண்டும். ஏற்கனவே 27 ஆண்டுகள் தண்டனை அனுபவித்தவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்பது என் கருத்து.

அதே போல் பாஜக ஆபத்தான கட்சியா என கேட்டால் எதிர்க்கட்சிகள் அவ்வாறு நினைப்பதால் அது எதிர்க்கட்சிகளுக்கு ஆபத்தான கட்சிதான். அந்தக் கட்சி ஆபத்தான கட்சியா என்பதை மக்கள் முடிவு செய்ய வேண்டும் என்னும் அர்த்தத்தில் நான் பதில் அளித்ததை பலரும் தவறாக புரிந்துக் கொண்டுள்ளனர்.

நான் இன்னும் அரசியலில் முழுமையாக இறங்காததால் பாஜக குறித்து எதுவும் சொல்ல முடியாது. இதை மக்கள் முடிவு செய்ய வேண்டும். எனது கட்சியை தொடங்கும் வேலைகள் நடைபெறுகின்றன. பாஜகவுக்கு எதிராக 10 பேர் சேர்ந்தால் யார் பலசாலி? அந்த 10 பேரா? இல்லை அவர்கள் எதிர்க்கும் ஒருவரா என்பதை நீங்களே முடிவு செய்யுங்கள்

ஜெயலலிதா இறந்த பிறகு நடிகர்களுக்கு குளிர்விட்டு போனது என சொல்லும் அமைச்சர்கள் நல்ல பதவியில் உள்ளனர். அவர்கள் யார் மனதையும் புண்படுத்தாமல் பேச வேண்டும் இதே போல் நான் அவர்களை சொன்னால் நன்றாக இருக்குமா?

சர்கார் சர்ச்சையில் அதிமுக செயல்பாட்டை நான் கடுமையாக கண்டிக்கிறேன். இது வன்முறை செயல். பேச்சு வார்த்தை நடத்தாமல் பேனரை கிழிப்பதும் படத்தை நிறுத்துவதும் சரி இல்லை.” என கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி