நான் தோனி ரசிகன்!: ரஜினி

ற்போதைய இந்திய அணியில் தோனிதான் தனக்குப் பிடித்த கிரிக்கெட் வீரர் என்று ரஜினி தெரிவித்துள்ளார்.

தடபுடலாக கட்சி அறிவிப்பை செய்த நடிகர் ரஜினி தற்போது மலேசியாவில் இருக்கிறார்.  நடிகர் சங்க விழாவில் பங்கேற்கிறார். . நடிகர் கமல் மற்றும் ரஜினி தங்கள் அரசியல் பிரவேசத்திற்கு பின் பங்கேற்கும் நிகழ்ச்சி இது என்பதால் அவர்களது பேச்சு எப்படி இருக்கும் என்ற ஆர்வம் பலருக்கும் இருக்கிறது.

இந்நிலையில், நட்சத்திர கிரிக்கெட் போட்டிகளைத் தொடங்கி வைத்தார் ரஜினி. அவரிடம் “உங்கலுக்குப் ப் பிடித்த கிரிக்கெட் வீரர் யார்” என்று  கேட்கப்பட்டது. அதற்கு, ரஜினி “எனக்கு எப்போதும் பிடித்த வீரர் சச்சின் டெண்டுல்கர். அதே நேரம் , தற்போதைய அணியில் தோனிதான் எனக்குப் பிடித்த வீரர்” என்றார்.