கருத்து தெரிவிப்பதில் ரஜினிக்கு கவனம் தேவை : பிரகாஷ் ராஜ்

சென்னை

டிகர் ரஜினிகாந்த் காவிரி விவகாரம் குறித்து கருத்து தெரிவிக்கும் போது கவனமாக இருக்க வேண்டும் என நடிகர் பிரகாஷ் ராஜ் கூறி உள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் காவிரி நீர் குறித்து தெரிவித்த கருத்துக்கு கர்நாடக மாநிலத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.  ரஜினி நடிக்கும் கால திரைப்படம் திரைக்கு வர உள்ளது.  இந்த படத்தை திரையிட கர்நாடக திரையரங்கு உரிமையாளர் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது.    கன்னட அமைப்பு தலைவரான வாட்டாள் நாகராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இது குறித்து நடிகர் பிரகாஷ் ராஜ், “ஒரு நடிகராக எந்த ஒரு கருத்தையும் தெரிவிக்க ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது.   ஆனால் கருத்தை தெரிவிக்கும் முன்பு அவர் கவனமாக இருக்க வேண்டும்.  அவர் காவிரி பற்றி கூறிய கருத்துக்காக காலா திரைப்படத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது.   இதற்காக நான் கவலைப்படுகிறேன்.

காலா திரைப்படத்தில் ரஜினிகாந்த் மட்டும் சம்மந்தப்படவில்லை.   ஆயிரக்கணக்கான தொழில் நுட்பக் கலைஞர்களும் நடிகர்களும் பணி ஆற்றி உள்ளனர்.    அந்த திரைப்படத்தை திரையிட வேண்டும்.   மக்களுக்கு உண்மையிலேயே ரஜினிகாந்த் கருத்துக்கு எதிர்ப்பிருந்தால் அந்தப் படத்தை அவர்கள் பார்க்க மாட்டார்கள்” எனக் கூறி உள்ளார்.

கார்ட்டூன் கேலரி