தமிழ் உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்று தெரியுமா?: ரஜினிக்கு சீமான் சவால்

சேலம்:

தமிழில் உயிர் மெய் எழுத்துக்கள் எத்தனை உள்ளது என்று ரஜினிகாந்துக்கு தெரியுமா என சீமான் கேள்வி எழுப்பியுள்ளார். நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வரக்கூடும் என்ற யூகம் தற்போது அதிகமாக எழுந்திருக்கிறது. இந்த நிலையில் அவர் அரசியலுக்கு வரக்கூடாது என்று சிலர் கூறிவருகிறார்கள்.

அவர்களில் ஒருவர் நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். இன்று அவர் சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன் பாளையத்தில் நாம் தமிழர் கட்சியின் பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசினார்.

அப்போது, ”தமிழ்நாட்டில் மணல் விலை மிக அதிகமாகிவிட்டது. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டு ற மாநிலங்களில் ரூ.40 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. வெளிநாடுகளில் ஒரு லட்சம் ரூபாய்க்கு மேல் விற்கப்படுகிறது” என்றவர், “இது குறித்தெல்லாம் நடிகர் ரஜினிகாந்துக்கு எதுவும் தெரியாது.

அவ்வளவு ஏன்… தமிழ்நாட்டில் எத்தனை ஆறுகள் ஓடுகின்றன என ரஜினிக்கு தெரியுமா” என்று கேள்வி எழுப்பினார். மேலும், “தமிழில் உயிர் மெய் எழுத்து எத்தனை உள்ளது என்று ரஜினிக்கு தெரியுமா. அவற்றை அவரால் வேகமாக சொல்லமுடியுமா. அப்படி சொல்லட்டும்… பிறகு அவர் அரசியலுக்கு வரட்டும்” என்றும் ஆவேசமாக கூறினார்.