ரஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும்! மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை

சென்னை : 

ஜினிகாந்த் யோசித்து பேச வேண்டும் என்று திமுக மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும்,வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என்றும் அறிவித்தார்.

தி.மு.க.வின் செயற்குழு கூட்டம் இன்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில், கட்சி யின் தலைவர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில், ஊரக உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள் மற்றும் காங்கிரசுடனான கூட்டணி குறித்து விவாதிக்கப்பட்டது.

அதைத் தொடர்ந்து, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும் என உள்பட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதைத்தொடர்ந்து, அண்ணா அறிவாலய வளாகத்தில்  செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின்,  “உள்ளாட்சி மன்ற தேர்தலில் மாபெரும் வெற்றியை வழங்கி மக்களுக்கு நன்றி தெரிவித்தார். . மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி தேர்தலை உடனே நடத்திட வேண்டும் என உள்பட 6 தீர்மானங்கள் செயற்குழுவில்  நிறைவேற்றப்பட்டுள்ளது என்று கூறியவர், வரும் 24-ம் தேதி தி.மு.க. கூட்டணி மற்றும் தோழமை கட்சிகளின் கூட்டம் நடைபெறும் என அறிவித்தார்.

நடிகர் ரஜினிகாந்த் ஒரு அரசியல்வாதி அல்ல, ஒரு நடிகர்.  தந்தை பெரியார் 95வயது வரை தமிழர்களுக்காக பாடுபட்டவர், அவர் தந்தை பெரியார் குறித்து பேசும் போது நடிகர்  யோசித்து கவனமுடன்  பேச வேண்டும்,” எனக் கூறினார்.