”மேன் வெர்சஸ் வைல்ட் ”  நிகழ்ச்சி தொகுப்பாளருக்கு ரஜினிகாந்த் நன்றி

சென்னை

டிஸ்கவரி தொலைக்காட்சி நிகழ்ச்சி தொகுப்பாளர் பியர் கிரிள்ஸுக்கு நன்றி தெரிவித்து ரஜினிகாந்த் டிவிட்டரில் பதிவு இட்டுள்ளார்.

டிஸ்கவரி தொலைக்காட்சியில் மிகவும் புகழ்பெற்ற நிகழ்ச்சியான மேன் வெர்சஸ் வைல்ட் என்னும் நிகழ்ச்சி உள்ளது.   பிரபலங்களைக் காட்டினுள் அழைத்துச் செல்லும் இந்த நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி ஏற்கனவே கலந்துக் கொண்டுள்ளார்.  இந்த நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பியர் கிரிள்ஸ் ஆவார்.

தற்போது அந்த நிகழ்வில் நடிகர் ரஜினிகாந்த் கலந்துக் கொண்டுள்ளார்.  இது குறித்துப் பல செய்திகள் வெளியாகி வருகின்றன.    பல நெட்டிசனகள் இந்த நிகழ்வு குறித்தும் அதில் ரஜினிகாந்த் பங்கேற்பு குறித்தும் பல கருத்துக்களைக் கூறி வருகின்றனர்.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் தனது டிவிட்டரில், “பியர் கிரில்ஸுக்கு இந்த ஒரு மறக்க முடியாத அனுபவ்த்துக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.  எனது அன்பு மற்றும்  நன்றிகள்” எனப் பதிந்துள்ளார்.