இமயமலைக்கு புறப்பட்டு சென்றார் ரஜினிகாந்த்….!

 

தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் 10 நாள் ஆன்மீக பயணமாக நடிகர் ரஜினி காந்த் இன்று காலை இமயமலைக்கு புறப்பட்டு சென்றுள்ளார் .

சென்னையில் இருந்து இன்று காலை 6.40 மணிக்கு விமானத்தில் புறப்பட்டு சென்ற அவர் இமயமலை அடிவாரத்தில் உள்ள உத்தரகாண்ட் மாநிலம் டேராடூன் சென்றுள்ளதாக தகவல் .

இந்த பயணத்தின் போது கேதார்நாத், பத்ரிநாத் ஆகிய இடங்களுக்கு பயணிக்க உள்ளதாக தெரிகிறது .

அத்துடன் துவாரா ஹாட் குருசரண் ஆசிரமத்தில் 3 நாட்கள் தங்க உள்ளதாகவும் அதன்பிறகு பாபாஜி குகைக்கு செல்ல ரஜினி திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.