சென்னை:

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அந்த பகுதி மக்கள் கடந்த 47 நாட்களாக போராடி வருகின்றனர். இன்று மக்கள் போராட்டம் 48வது நாளை எட்டி உள்ளது.

இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ரஜினி, ஆலைக்கு அனுமதி அளித்த அரசு தற்போது வேடிக்கை பார்ப்பது புரியாத புதிராக உள்ளது என்று கூறி உள்ளார்.

இந்நிலையில், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று மக்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபடப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதற்காக அவர் தூத்துக்குடி பயணமாகி உள்ளதாகவுங்ம கூறப்படுகிறது.

அதுபோல, நாளை ஸ்டெர்லைட் போராட்டத்தில் கலந்துகொள்ள மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமலஹாசன் செல்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்த் ஸ்டெர்லைட் போராட்டம் குறித்து டுவிட் பதிவிட்டுள்ளார்.

அதில்,  ஸ்டெர்லைட் தொழிற்சாலையால் மக்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று 47 நாட்களா அவதிப்பட்டு போராடிக்கொண்டிருக்கும் போது, தொழிற்சாலை நடத்த அனுமதி கொடுத்த அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வேடிக்கை பார்த்துக்கொண்டிருப்பது புரியாத புதிராக உள்ளது.

இவ்வாறு ரஜினி பதிவிட்டுள்ளார்.