ரஜினி பட வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ்..

ரஜினி பட வில்லனுக்கு விவாகரத்து நோட்டீஸ்..

ரஜினிகாந்த்தின்  ’பேட்ட’ படத்தில் வில்லனாக நடித்துள்ள நவாசுதீன் சித்திக்,இந்தியில் மிகவும் பிரபலம்.

அவரது மனைவி ஆலியா, விவாகரத்து கேட்டு நவாசுதீனுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.

‘’ எங்களுக்குள் திருமணமான கொஞ்ச நாட்களிலேயே பிரச்சினை தொடங்கி விட்டது. இருப்பினும் இரண்டு மாத கால ஊரடங்கு நேரத்தில் ஆற அமர யோசித்து, விவாகரத்து முடிவுக்கு வந்துள்ளேன். இனிமேல் எனது சொந்த பெயரான அஞ்சனா கிஷோர் பாண்டே எனப் பெயரை மாற்றிக்கொள்ளப் போகிறேன்’’ என்ற ஆலியாவிடம் ‘’ஏன் டைவர்ஸ்?’’ என்று கேட்டபோது கொஞ்சநேரம் மவுனமாக இருந்தார்.

‘’நிறையக் காரணங்கள் உள்ளன. இப்போது சொல்ல முடியாது. சித்திக் சகோதரர் ஷாமாசும் ஒரு காரணம்’’ என்று முடித்துக்கொண்டார்.

 

ஆலியா சார்பில் விவாகரத்து நோட்டீஸ் அனுப்பியுள்ள வழக்கறிஞர் அபயிடம் கேட்டபோது’’  விவாகரத்து நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ள விவரங்களைக் கூற முடியாது. விவாகரத்துக்கு ஆலியா கூறியுள்ள காரணங்கள் மிகக்கடுமையானவை’’ என்று சஸ்பென்ஸ் வைத்தார், வழக்கறிஞர்.

 ’’கேள்வியின் நாயகன்’ நவாசுதீன் சித்திக்கும் இந்த விவகாரம் குறித்து வாய் திறக்க மறுத்து விட்டார்.

மனைவியின் நோட்டீசுக்கு அவர் இன்னும் பதில் அனுப்ப வில்லை.

– ஏழுமலை வெங்கடேசன்