காசி விஸ்வநாதர் கோவிலுக்கு முறுக்கு மீசையுடன் வருகை தந்த ரஜினி

உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு முறுக்கு மீசையுடன் நடிகர் ரஜினிகாந்த் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். பேட்ட படப்பிடிப்பில் இருந்து கோவிலுக்கு வந்ததால் ரஜினியை போட்டோ எடுத்து ரசிகர்கள் சமூகவலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

rajini

‘காலா’ படத்திற்குப் பிறகு நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ‘பேட்ட’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் ரஜினியுடன் சேர்ந்து விஜய் சேதுபதி, சசிகுமார், த்ரிஷா, சிம்ரன், நவாசுதீன் சித்திக் உள்ளிட்ட பல முன்னணி நடிகர்களும் நடித்து வருகின்றனர்.

இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. தற்போது ‘பேட்ட’ படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு லக்னோ மற்றும் வாரணாசியில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

இந்நிலையில் படப்பிடிப்பிற்கு இடையே ரஜினி உலகப்புகழ் பெற்ற காசி விஸ்வநாதர் கோவிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தார். ரஜினி, காசி விஸ்வநாதர் கோவிலுக்கு வந்த விஷயத்தை தெரிந்து கொண்ட அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் அவரை பார்க்க முண்டியடித்துக் கொண்டதால்
பரபரப்பு ஏற்பட்டது.

முறுக்கு மீசையுடன் கோவிலுக்கு வந்த ரஜினியை காண திரண்ட மக்கள் அவரை போட்டோ எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

You may have missed