சென்னை

டிகர் ரஜினிகாந்த் திருவல்லிக்கேணியில் உள்ள ராகவேந்திரா மடத்துக்கு வந்து சாமி தரிசனம் செய்துள்ளார்.

நடிகர் ரஜினிகாந்த் தீவிர அரசியலில் இறங்கப்போவதாக அறிவித்திருந்தார்.  அதன் பிறகு தனிக்கட்சி தொடங்கும் பணிகளை தீவிரப்படுத்தி இருக்கிறார்.   மேலும் ரஜினி மக்கள் மன்றத்துக்கான நிர்வாகிகள் நியமிக்கும் பணிகளும் உறுப்பினர்கள் சேர்க்கையும் மும்முரமாக நடை பெற்று வருகிறது.

இன்று காலை திடீரென ரஜினிகாந்த் திருவெல்லிக்கேணியில் அமைந்துள்ள ராகவேந்திரா மடத்துக்கு வந்து அங்குள்ள கோவிலில் சாமி தரிசனம் மற்றும் பூஜைகள் செய்துள்ளார்.   கோவில் சார்பில் அவருக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.   பயபக்தியுடன் ரஜினிகாந்த் அதை பெற்றுக் கொண்டார்.

ராகவேந்திரரின் தீவிர பக்தர்களில் ஒருவரான ரஜினிகாந்த் அவருடைய வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்ட “ஸ்ரீராகவேந்திரர்” திரைப்படத்தில் ராகவேந்திரராக நடித்து புகழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.