பெங்களூரில் சிகிச்சை பெற்றுவரும் சகோதரனை சந்தித்த ரஜினிகாந்த்…..!

 

நடிகர் ரஜினிகாந்தின் மூத்த சகோதரர் சத்ய நாராயண ராவுக்கு, கர்நாடகா மாநிலம் பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில், முழங்கால் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்நிலையில், தர்பார் படப்பிடிப்புக்காக ஜெய்ப்பூரில் இருந்த ரஜினிகாந்த், பெங்களூருவுக்கு சென்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் சத்ய நாராயணாவை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

தமது சகோதரர் சத்ய நாராயணராவை, நடிகர் ரஜினிகாந்த் நேரில் சந்தித்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரளாகி வருகிறது.