ஸ்டெர்லைட் ஆலை மூடல்: ரஜினி வரவேற்பு

--

 

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுவதாக தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதற்கு நடிகர் ரஜினிகாந்த் ஆதரவு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஆடியோவில், “

ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டுள்ளது, உயிரிழந்த ஆத்மாக்களுக்கு வெற்றி சமர்ப்பணம். அப்பாவி மக்களின் ரத்தத்தை குடித்த இதுபோன்ற போராட்டங்கள் எதிர்காலத்தில் தொடரக் கூடாது என்று இறைவனை வேண்டுகிறேன்” என்று ரஜினி தெரிவித்துள்ளார்.