தனது படங்கள் வரும்போது மட்டுமே ரஜினிகாந்த் பேசுவார்! ஈவிகேஎஸ். இளங்கோவன் ‘பளார்’

--

சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக அறிவித்து நடிகர் ரஜினிகாந்த் தனது படங்கள் வரும்போது மட்டுமே பேசுவார் என்றும் கட்சி தொடங்க மாட்டார் என்றும், அந்த நம்பிக்கை தனக்கு இல்லை என்றும் தமிழக முன்னாள் காங்கிரஸ் கட்சி தலைவர்  ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் பேசிய தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன், ரஜினியின் அரசியல் பிரவேச அறிவிப்பு குறித்து கடுமையாக சாடினார்.

நடிகர் ரஜினி அரசியல் வரப்போவதாக அறிவித்து ஒரு வருடம் நெருங்கி உள்ள நிலையில், செய்தியாளர்களின் சந்திப்பின்போது, அரசியல் கட்சிக்கான அடித்தளம் ஸ்டாங்காக போட்டு வருவதாக கூறி வருகிறார்.  தோடர்ந்து ரசிகர் மன்றங்களை மக்கள் மன்றமாக மாற்றி நடவடிக்கை எடுத்தார்.

ஆனால், பின்னர் புதுப்புது படங்களில் நடிக்க ஒப்பந்தாகி, படப்பிடிப்புகளில் பிசியாக நடித்து வருகிறார். ஒவ்வொரு படம் முடிந்த வெளியாகும் வேளையில், தனது ரசிகர்களுடன் சந்திப்பு ஏற்படுத்தி, பரபரப்பாக ஏதேனும் கருத்துக்களை கூறி தனது படத்தை வெற்றிப்படமாக ஓட்டி வருகிறார்.   இதன் காரணமாக அவரது மக்கள் மன்ற நிர்வாகிகள் சோர்ந்து போயுள்ளனர்.

இந்த நிலையில், தற்போது ‘பேட்ட’ படத்தின் படப்பிடிப்பு முடிந்து, விரைவில் வெளியாக உள்ள நிலையில், மீண்டும் மக்கள் மன்றத்தினர் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.

இந்த நிலையில், ரஜினிகாந்தின் அரசியல் பிரவேசம் குறித்து, ஈவிகேஎஸ் இளங்கோவனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த இளங்கோவன், ரஜினிக்கு பின்னால்  பாரதிய ஜனதா இருக்கிறது என்று அதிர்ச்சி தகவலை கூறினார். மேலும், ரஜினி  கட்சி தொடங்குவார் என்ற நம்பிக்கை எனக்கு இல்லை. அவரது படங்கள் வெளிவரும் போது இப்படி எதையாவது பேசுவார் என்றும், ,  அடுத்தடுத்து தேர்தல் வந்து கொண்டிருக்கும். ஆனால் அவர் அரசியல் கட்சி தொடங்கமாட்டார் என்றும் உறுதிப்பட கூறினார்.

அதேவேளையில்,, கமலுக்கு பின்னால் பாரதிய ஜனதா கிடையாது என்றவர், பா.ஜனதாவோடு ரஜினியோ, கமலோ   இணைந்தால் மொத்தமாக காணாமல் போய்விடுவர் .

இவ்வாறு இளங்கோவன் கூறினார்