அடுத்த ஆண்டு ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார்: தமிழருவி மணியன் மீண்டும் நம்பிக்கை

சென்னை:

ஜினிகாந்த் அடுத்த ஆண்டு கட்சி தொடங்குவார் என்று தமிழருவி மணியன் மீண்டும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த 2017-ஆம் ஆண்டு டிசம்பர் 31-ஆம் தேதி”நான் அரசியலுக்கு வருவது உறுதி, என்று அறிவித்த ரஜினி, தனது ரசிகர்களிடையே  234 தொகுதியிலும் போட்டியிட போகிறோம். போருக்கு தயாராகுங் கள் என கூறி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதுவரை அரசியல் கட்சித் தொடங்காமல் மோடி அரசுக்கு ஜால்ரா அடித்து வருகிறார்.

இந்த நிலையில், இன்று காலை சென்னை போயஸ்கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்துக்கு சென்று அவரை சந்தித்த தமிழருவி மணியன்  பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, ரஜினிக்கு  பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்க வந்தாகவும், ரஜினியின் பிறந்தநாளில் கட்சி குறித்த அறிவிப்பு வர வாய்ப்பில்லை என்று தெரிவித்தவர்,  அடுத்தாண்டு கட்சித் தொடங்குவது உறுதி என்று கூறினார்.

தொடர்ந்து பேசியவர்,  கட்சி தொடங்குவது குறித்து ரஜினிதான் கூற முடியும் என்று ஜகா வாங்கியவர், ரஜினி ஆழமாக சிந்திப்பவர், எந்த விஷயத்திலும் சாதக, பாதகங்களை அலசி ஆராய்பவர் என்று புகழாரம் சூட்டிவிட்டு,  எனது கருத்துகளுக்கும், ரஜினிக்கும் தொடர்பில்லை என்று கூறினார்.

மேலும் செய்தியாளர்களின்  கேள்விக்கு பதில் அளித்த தமிழருவி மணியன்,  தமிழகத்தில்  உள்ளாட்சித் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்றும்,  ரஜினி, கமல் இணைந்து செயல்படுவது குறித்து அவர்கள் இருவருமே பேசிவிட்டார்கள் என்றும் தெரிவித்தார்.

ஏற்கனவே ரஜினி கட்சித் தொடங்குவார் என பலமுறை கூறியுள்ள தமிழருவி மணியன், ரஜினி எப்போது கட்சியைத் தொடங்குவார், அடுத்த ஆண்டு என்றால் 2020ம் ஆண்டா என்பத குறித்த கேள்விக்கு பதில் அளிக்க மறுத்து விட்டார்.

You may have missed