குஷ்பு மகளின் கனவை நிறைவேற்றிய ரஜினி….!

 

சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வரும் தலைவர் 168 படத்தில் குஷ்பு நடிக்கிறார் என்பது அனைவரும் அறிந்ததே .

தற்போது படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் ஃபிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. அங்கு குஷ்புவின் இளைய மகள் அனந்திதா ரஜினியுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார் . இதை குஷ்பு தனது ட்விட்டரில் பக்கத்தில் வெளியிட்டார்.

அதில் என் இளைய மகளின் கனவு நிறைவேறிவிட்டது… உங்களின் நேரத்திற்கும், ஆசிக்கும் நன்றி ரஜினி சார். உங்களின் எளிமையை பார்த்து என் மகள் அசந்துவிட்டாள் என்று பதிவிட்டுள்ளார் .