பிப்ரவரி 11ந்தேதி ரஜினிகாந்த் இளையமகள் சவுந்தர்யா விசாகன் மறுமணம்!

சென்னை:

டிகர் ரஜினிகாந்தின் இளையமகள் சவுந்தர்யாவுக்கும், வணங்காமுடி விசாகன் என்பவருக்கும் இடையே திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ள நிலையில், வரும் பிப்ரவரி 11ந்தேதி சென்னையில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் திருமணம் நடைபெற உள்ளது.

இது சவுந்தர்யாவுக்கும், விசாகனுக்கும்  2வது திருமணமாகும்.  இந்த திருமணத்தில் பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

மறுமண ஜோடி: சவுந்தர்யா – விசாகன்

ரஜினிகாந்தியின் இளையமகள் சவுந்தர்யா  சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் அஸ்வின் ராம்குமார் இடையே கடந்த  2010ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 3ம் தேதி திருமணம் நடைபெற்றது. . இருவரும் சுமார் 4 ஆண்டுகள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு வேத் என்ற பெயரில்  ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது  இந்த நிலையில், கருத்து வேறுபாடு காணமாக கடந்த 2016ம் ஆண்டு பிரிந்தனர்.

அதைத்தொடர்ந்து தனிமையில் இருந்த சவுந்தர்யாவுக்கும்,  தொழில் அதிபர் விசாகனுக்கும் இடையே காதல் மலர்ந்ததாக கூறப்படுகிறது. அதைத்தொடர்ந்து இருவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வரும் பிப்ரவரி மாதம் 11ந்தேதி சென்னையில் திருமணம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

முன்னதாக  சவுந்தர்யா தனது தாய் லதா ரஜினிகாந்த்துடன் கடந்த 6ம் தேதி முன்தினம் இரவு திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு சென்று ஏழுமலையானின் திருப்பாதங்களில் வைத்துப் பூஜை  செய்ததாகவும் கூறப்படுகிறது.

சவுந்தர்யா – அஸ்வின்

சென்னை எம்.ஆர்.சி நகரில் உள்ள பிரபல ஐந்து நட்சத்திர விடுதியில் நடைபெறும் இந்த திருமணத்தில் நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் திரை பிரபலங்கள் பங்கேற்கவுள்ளனர்.

சவுந்தர்யாவை திருமணம் செய்யும் விசாகன் என்பவர், ஏற்கனவே தினகரன் பத்திரிகையின் நிறுவனரான கே.பி.கே.குமரனின் மகள் கனிகாவை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுபோல சவுந்தர்யாவும் விவாகரத்து பெற்றவர்.