ஆமிர்கானின் ‘தங்கல்’ வாழ்நாள் சாதனையை முறியடித்த ரஜினியின் ‘2.O’

ந்திய சினிமா உலகில் ஆமிர்கான் நடித்த படமான தங்கல் படம் தமிழ் இந்தி, தெலுங்கு என பல மொழிகளில் வெளியாகி மாபெரும் வசூலை ஈட்டி சாதனை படைத்து பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தில் இருந்து வந்தது.

தற்போது ரஜினிகாந்தின் 2.0 இந்திய பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை பிடித்துள்ளது.  ஆமிர்கானின் தங்கல் சாதனையை முறியடித்து உள்ளது.

லைக்கா தயாரிப்பில் இயக்குனர் ஷங்கரின் கைவண்ணத்தில் ரஜினி நடித்து வெளியான படம் 2.0, இந்த படம் நாடு முழுவதும் வெளியாகி சக்கைபோடு போட்டு வருகிறது. வசூலை வாரிக் குவித்து வருகிறது. இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைத்துள்ளார்.

படம் வெளியான 12 நாட்களில் சென்னையில் மட்டும் சுமார் 19 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதுபோல மற்ற மொழிகளிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.

2.0 படம் வெளியாகி நாடு முழுவதும் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், படத்தின் வருமான ரூ.600 கோடியை எட்டி பாக்ஸ் ஆபிசில் முதலிடத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இது இந்திய திரையுலகின் வரலாற்று சாதனை என்று கூறப்பபடுகிறது.

ஏற்கனவே  அமிர்கானின் தங்கல் படம் 3 மொழிகளையும் சேர்த்து 380 கோடி வசூழலித்த நிலையில், ரஜினியின் 2.0 படம் ஏற்கனவே 400 கோடியை தாண்டி உள்ளது.

2,0 இந்தி வெர்சன் வெளியாகி 2வது நாளிலேய சராசரியான வருமானத்தை ஈட்டிய நிலையில், மொத்ததில் 73.5 கோடியை வசூலித்து சாதனை படைத்தது.  இந்தியில் ஒரே நாளில் 25 கோடி வசூலாகி உள்ளது.

இநத் 2018ம் ஆண்டில் இதுவரை வேறு எந்தபடும் இதுபோன்ற வசூல் சாதனை படைத்தது இல்லை என்று கூறப்படுகிறது.

ஏற்கனவே அமிர்கானின் தங்கல் படம் இந்தி, தமிழ், தெலுங்கில் வெளியாகி மாபெரும் சாதனை படைத்திருந்தது. தற்போது அதை ரஜினியின் 2.0 மிஞ்சி சாதனை படைத்துள்ளது.

அமிர்கானின் தங்கல் படத்தில் ஆயுள் வருமானத்தை 2.O முந்தி உள்ளது கூறப்படுகிறது.