வாட்ஸ்அப் குரூப்: ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு

சென்னை:

வாட்ஸ்அப் குரூப் தொடர்பாக  ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு ரஜினிகாந்த் முக்கிய அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.  மேலும், ரஜனி மக்கள்மன்றத்தில் தகவல்கள் வெளியில் கசிவதை தடுக்கும் வகையில்,  ரஜினி மக்கள் மன்றத்திலிருந்து நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பு வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.

அரசியலுக்கு வருவதாக அறிவித்த ரஜினி, ரசிகர் மன்றத்தை மக்கள் மன்றமாக மாற்றி மெருகேற்றி வருகிறார். மாநிலம் முழுவதும் ரஜினி மக்கள் மன்றத்தினருக்கு உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வருகிறது.

மேலும், நகரம்,  மாவட்டம், ஒன்றியம் சார்பாக ரஜினி மக்கள் மன்றம் சார்பாக வாட்ஸ்அப் குரூப்கள் ஏற்படுத்தப்பட்டு நிர்வாகிகள் இணைக்கப்பட்டுள்ளனர். கட்சி விதிகள் மீறி செயல்படுபவர்கள் மீது  ஒழுங்கு நடவடிக்கை குழு  நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

மேலும் நிர்வாகிகளை முறைப்படுத்த அந்தந்த மாவட்டங்கள், அணிகளுக்கு தனித்தனியாக வாட்ஸ்அப் குழுக்கள் இயங்குகின்றன.

இந்த நிலையில், ரஜினி, மக்கள் மன்றத்தினருக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளார்.

அதில், ‘மன்றத்தில் இருந்து நீக்கப்பட்டவர்களை வாட்ஸ்அப் குழுக்களில் இருந்தும் உடனடியாக நீக்கப்பட வேண்டும். அப்படி நீக்கப்படும் உறுப்பினர்களை மறு உத்தரவு வரும் வரை குரூப்பில் சேர்க்க கூடாது.

ரஜினி மக்கள் மன்ற மாவட்ட, ஒன்றிய, நகர வாட்ஸ்அப் குரூப்களில் பிற மாவட்ட நபர்களை சேர்க்க கூடாது. வாட்ஸ்அப் குரூப்களில் அந்தந்த மாவட்ட நிர்வாகிகளை மட்டுமே உறுப்பினராக சேர்க்க வேண்டும்’

இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.