ரஜினிகாந்த் பிறந்தநாள்: வைகோ வாழ்த்து

சென்னை,

ன்று நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாள். அவருக்கு திரையுலகினர் அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இன்று பிறந்த நாள் காணும் ரஜினிகாந்த் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ காலையில் அலைபேசி வாயிலாக தொடர்புகொண்டு வாழ்த்து தெரிவித்தார்.,

அப்போது,  “ரஜினி  இன்னும் பல்லாண்டு காலம் முழுமையான உடல் நலனுடனும் மன நிறைவுடனும் மகிழ்ச்சியாக நீங்கள் வாழ இயற்கைத் தாயின் அருளை வேண்டி வாழ்த்துகிறேன்” என்று பிறந்தநாள் வாழ்த்துத் தெரிவித்தார்.