தராபாத்: உடல்நலம் பாதிப்பு காரணமாக  ஐதராபாத்தில் உள்ள அப்போலோ மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ரஜினிகாந்த்.  எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று மாலை முடிவு செய்யப்படும்  என  அப்போலோ நிர்வாகம் அறிக்கை வெளியிட்டு உள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்புக்காக ஐதராபாத்தில் முகாமிட்டிருந்த ரஜினிகாந்த், படக்குழுவினர் 8 பேருக்கு தொற்று உறுதியான நிலையில், அவரும் தனிமைப்படுத்திக் கொண்டதாக கூறப்பட்டது.  ஆனால், ரஜினிக்கு கொரோனா நெகடிவ் என்றதால், அவரது ரத்த அழுத்தம் ஏறி இறங்கி  சீரற்ற நிலை ஏற்பட்டதால்,  ஐதராபாத் நகரில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், நேற்று இரவு மருத்துவமனை அறிக்கையில்,   “ரஜினிகாந்த்தின் உடல்நிலை சீராக உள்ளது. அவரது உடல்நிலை மிகவும் நெருக்கமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவரது ரத்த அழுத்தம் கட்டுப்பாட்டில் இருக்கச் சரியான அளவு மருந்துகள் தரப்படுகின்றன. அவர் ஓய்வெடுத்து வருகிறார்” எனத் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், ரஜினிகாந்த் உடல்நிலை குறித்து தற்போது அப்போலோ நிர்வாகம் புதிய அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், ரஜினியின் ரத்த அழுத்தம் சற்று கூடுதலாகவே உள்ளது. அவர் தொடர்ந்து கண்காணிப்பில் உள்ளார்.  மருத்துவ பரிசோதனையில் கவலைபபடும் வகையில் ஏதும் இலலை. அவர் எப்போது டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்பது குறித்து இன்று மாலை  முடிவு செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.