ரஜினிகாந்த்தின் சிஏஏ, என்சிஆர், என்பிஆர் ஆதரவு: தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பு

சென்னை:

த்தியஅரசு கொண்டு வந்துள்ள சிஏஏ, என்சிஆர் , என்பிஆர் ஆதரவு தெரிவித்த ரஜினிகாந்த், சிஏஏக்கு எதிரான போராட்டங்களை சிலர் தூண்டி வருவதாக குற்றம் சாட்டினார்.

பாஜகவின் ஊதூகுழாலாக செயல்படும் ரஜினிகாந்தின் கருத்துக்கு திமுக உள்பட பல கட்சிகள் கடும்எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், அதிமுக, பாஜக ஆதரவு அளித்து உள்ளது.

ரஜினியின் கருத்து தொடர்பாக அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள கருத்துக்களே இங்கே காணலாம்…

அமைச்சர் ஜெயக்குமார் – அதிமுக.

அதிமுகவின் நிலைப்பாடுகளையே ரஜினி வெளிப்படுத்தியுள்ளார்  என்று  அமைச்சர் ஜெயக்குமார் கூறி உள்ளார்.

விடுதலை சிறுத்தைகள் கட்சி திருமாளவளன்

ரஜினியின் குரல் பாஜகவின் குரலாக உள்ளது என்றும், அரசியல் கட்சியை தொடங்குவதற்கு முன்பே ரஜினி தன்னை அடையாளப்படுத்திக் கொள்ள முயற்சிக்கிறார்  என்று கண்டனம் தெரிவித்து உள்ளார்.

பாஜக – எச்.ராஜா

ரஜினி பேச்சு குறித்து, தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த பாஜக தேசியச் செயலாளர் எச்.ராஜா, “ரஜினிகாந்த் சரியான கருத்தை தெரிவித்திருக்கிறார். நாடாளுமன்றத்திலும், அதற்கு வெளியிலும் பிரதமர், உள்துறை அமைச்சர் ஆகியோர், எந்தவொரு இந்திய குடிமகனுக்கும் குடியுரிமை பறிக்கப்படாது என்பதை உறுதிபடத் தெரிவித்துள்ளனர். இதனை ரஜினிகாந்த் சரியாகப் புரிந்துகொண்டு பேசியிருக்கிறார். இது பாராட்டுக்குரிய விஷயம்” என கூறினார்.

 உதயநிதி ஸ்டாலின் – திமுக

நடிகராக இருப்பதால் ரஜினிக்கு அரசியல் தெரியவில்லை. அவர் அரசியலுக்கு வந்தால் அவரது கருத்துக்கு பதில் கூறுகிறேன். ரஜினி தனது கொள்கை என்னவென்றே தெரியாமல் இருக்கிறார் என விமர்சித்துள்ளார்.

கார்ட்டூன் கேலரி