ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் , லைக்கா நிறுவன தயாரிப்பில் ரஜினி நயன்தாரா நடித்து வரும் படம் ‘தர்பார்’. இந்தப் படத்தின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்புமே முடிவடைந்தது.

இந்த படத்தில் யோகிபாபு, ஜதின் சர்னா, பிரதீக் பாபர், நிவேதா தாமஸ், பேபி மானஸ்வி உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். சந்தோஷ் சிவன் இதில் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படம் வரும் பொங்கலுக்கு வெளியாக உள்ளது.

‘தர்பார்’ இறுதி நாள் படப்பிடிப்பின் போது, ரஜினியுடன் நடித்தவர்கள் பலரும் அவருடன் புகைப்படம் எடுத்துக் கொண்டனர். இந்தப் படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.