‘காலா’ டீசர் வெளியீடு தள்ளிவைப்பு: தனுஷ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை:

டிகர் ரஜினிகாந்த் நடித்து வந்த காலா படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் வரும் மார்ச் 1ந்தேதி படத்தின் டீசர் வெளியிடப்படும் என தயாரிப்பாளரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் அறிவிருந்த நிலையில், தற்போது மார்ச் 2ந்தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

ரஜினிகாந்த் நடித்து, வொண்டர்பார் பிலிம்ஸ் தயாரித்துள்ள காலா திரைப்படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்பட பலர் நடித்துள்ளனர்.

நடிகரும், ரஜினியின் மருமகனுமான தனுஷ் தயாரித்துள்ள இந்த படத்தை பா. ரஞ்சித் இயக்கியுள்ளார். சந்தோஷ் நாராயண் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் ஏப்ரல் 27ம் தேதி ரிலீசாகும் என்று தனுஷ் அறிவித்துள்ள நிலையில், தற்போது மார்ச் 1ந்தேதி டீசர் வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

இநநிலையில், நேற்று காலை காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் மூச்சுத்திணறல் காரணமாக சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். அவரின் மரணத்துக்கு இறுதி மரியாதை அளிக்கும் விதமாக ‘காலா’ படத்தின் டீசரை மார்ச் 2-ம் தேதி வெளியிடப்போவதாக அறிவித்துள்ளார் படத்தின் தயாரிப்பாளர் தனுஷ்.

டீசருக்காக ஆவலாகக் காத்திருந்த ரசிகர்களை வருத்தமடையச் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாகவும் கூறியுள்ளார் தனுஷ்.