ரஜினிகாந்தின் ‘காலா’ இந்தி பதிப்பு ஜுன் 7ந்தேதி வெளியீடு

டிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தின் இந்தி பதிப்பு ஜூன் 7ந்தேதி வெளியிடப்படும் என்று தயாரிப்பாளர் தனுஷ் தெரிவித்து உள்ளார்.

நடிகர் தனுஷ் தயாரிப்பில் பா.ரஞ்சித் இயக்கியுள்ள பிரமாண்டமான படம் காலா. இந்த படத்தில் ரஜினிகாந்த் மும்பை தாராவி பகுதியில்  செயல்பட்டு வந்த  பிரபல டான் ஒருவர் பற்றிய கதை என்று கூறப்படுகிறது.

இந்த படத்தில் ரஜினிகாந்துடன் பிரபல பாலிவுட் நடிகர் நானே படேகர், ஹுமா குரோசி போன்றோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தின் டீசர் கடந்த மாதம் வெளியாகி சாதனை படைத்துள்ள நிலையில், காலவின் இந்தி பதிப்பு அடுத்த மாதம் 7ந்தேதி வெளியாக இருப்பதாக தனுஷ் தெரிவித்து உள்ளார்.

காலாவின் இந்தி மற்றும் தெலுங்குப் பதிப்புகளும் நல்ல விலைக்கு விற்பனையாகி இருப்பதாக கூறப்படுகிறது..