பெங்களூரு:

ரஜினியின் காலா படம் ஜூன் 7-ம் தேதி திரைக்கு வர உள்ளது. இதன் டிரைலர் நேற்று வெளி£னது. இந்நிலையில் காலா படம் கர்நாடகாவில் வெளியாகாது என அம்மாநில திரைப்பட வர்த்தக சபை இன்று அறிவித்துள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ரஜினி வலியுறுத்தியதை தொடர்ந்து அவரது படங்கள் வெளியாக அனுமதிக்க மாட்டோம் என கன்னட அமைப்புகள் அறிவித்திருந்தன.

இந்த படத்துக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என்று 11 அமைப்புகள் அறிவித்திருந்த நிலையில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.