ரஜினியை சந்தித்த விசுவாசம் இயக்குனர் சிவா…!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் தர்பார் படத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.லைகா நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

இதை தொடர்ந்து கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்புராஜ், ஹெச்.வினோத் ஆகியோரின் படங்களில் நடிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் விஸ்வாசம் படத்தின் இயக்குநர் சிவா, ரஜினியை சந்தித்து பேசியுள்ளார். இந்த சந்திப்பு சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நடந்துள்ளது , புதிய கதை ஒன்றை கூறியதாக தகவல் கசிந்துள்ளது.

எனவே அடுத்து சிவா படத்தில் ரஜினி நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி