ரஜினியின் ‘பேட்ட’ படத்தில் 6 காட்சிகளை நீக்கிய சென்சார் குழு!
ரஜினிகாந்த் நடிப்பில் பொங்கலுக்கு வெளியாக உள்ள பேட்ட படத்திலிருந்து 6 காட்சிகளை சென்சார் குழுவினர் நீக்கியுள்ளனர்.
ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த 2.0 திரைப்படத்தை தொடர்ந்து ரஜினிகாந்த் ‘பேட்ட’ படத்தில் நடித்துள்ளார். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் சிம்ரன், த்ரிஷா, விஜய் சேதுபதி, சசிகுமார், பாபி சிம்ஹா, மேகா ஆகாஷ் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிரூப் இசையமைத்துள்ளார்.
படத்தின் அனைத்து வேலைகளும் முடிந்த நிலையில் பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்தனர். அண்மையில், இப்படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
அண்மையில் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடந்து முடிந்த நிலையில் படத்தில் ட்ரெய்லர் வரும் 28ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இப்படம் 2 மணி 51 நிமிடங்களுக்கு ஓடக்கூடியது எனறும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தணிக்கைக்கு சென்ற ’பேட்ட’ படத்திற்கு சென்சார் குழுவினர் யு/ஏ சான்றிதழ் அளித்துள்ளனர். தற்போது பேட்ட திரைப்படத்தில் சென்சார் குழுவினரால் நீக்கப்பட்ட மற்றும் மியூட் செய்யப்பட்ட 6 காட்சிகளின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளன.