8 பேருக்கு கொரோனா தொற்று ; “அண்ணாத்த” படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்…!

 

கொரோனா காரணமாக ஐதராபாத்தில் நடந்து வந்த ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. டிசம்பர் 14 ஆம் தேதி படப்பிடிப்பு மீண்டும் தொடங்கப்பட்ட நிலையில் 15 நாட்களுக்கு படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டிருந்தது.

ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வந்த படப்பிடிப்பில் ரஜினி, நயன்தாரா,குஷ்பு, மீனா உள்ளிட்டோர் நடித்து வந்தனர்.

இந்நிலையில் அண்ணாத்த படப்பிடிப்பில் 8 பேருக்கு கொரோனா உறுதியானதால் படப்பிடிப்பு ரத்தாகியுள்ளது.

அண்ணாத்த படப்பிடிப்பு ரத்தாகியுள்ளதால் நடிகர் ரஜினிகாந்த் சென்னை திரும்புகிறார்.