திவாலை நோக்கிச் சென்றுகொண்டிருக்கும் யெஸ் வங்கியின் தமிழகத் தலைவராக சூப்பர் ஸ்டார் ரஜினியின் மைத்துனர் இருந்து வருவது தெரிய வந்துள்ளது…. இதன் காரணமாக யெஸ் வங்கியின் பணம் திரையுலகிலும் பாய்ந்திருக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது… இதுகுறித்து விரைவில் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்ப்பு நிலவி வருகிறது…

தனியார் வங்கிகளில் 4வது பெரிய வங்கியாக திகழ்ந்து வந்த  YES வங்கி, கடந்த ஆண்டு பெரும் நிறுவனங்களுக்கு வாரி வழங்கிய கடன் காரணமாக கடுமையாக நிதிச்சிக்கலில் சிக்கி திவாலாகும் நிலைமைக்கு சென்றுள்ளது. தற்போது, அதை இந்திய ரிசர்வ் வங்கி கைப்பறி,  எஸ்பிஐ வங்கியின் முன்னாள் அதிகாரி பிரசாந்த் குமாரை நியமனம் செய்து, பணம் எடுக்கவும் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இதனால் Yes வங்கியில் கணக்கு வைத்திருந்த லட்சக்கணக்கான வாடிக்கையாளர்கள் கடுமையான அவஸ்தைக்கு ஆளாகி உள்ளனர்.  ஏப்ரல் 3ந்தேதி  வரை ஆர்பிஐ கட்டுபாட்டின் கீழ் உள்ள இந்த வங்கி, இந்த காலகட்டத்தில் ரூ. 50,000 மேல் பெற அனுமதிக்கப்படமாட்டார்கள். அவரச தேவைக்கு மட்டும் அனுமதியுடன் அதிகமாக பணம் எடுத்துக் கொள்ளலாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

யெஸ் வங்கி தலைவர் ரானா கபூர் கைது செய்யப்பட்டு, தற்போது தீவிர விசாரனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

யெஸ் பேங்கினை புணரமைக்கும் பொருட்டு போதிய திட்டங்கள் உள்ளதாக ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ள நிலையில், தற்போது எஸ்பிஐ முதல்கட்டமாக 2,450 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.  ஆனால், அதானி நிறுவனம், திருப்பதி தேவஸ்தானம் உள்பட பெரும் நிறுவனங்கள் முன்கூட்டியே தங்களது பணத்தை யெஸ் வங்கியில் இருந்து எடுத்து மற்ற வங்கிகளில் டெபாசிட் செய்துள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், யெஸ் வங்கிகளின் தமிழக  தலைமைஅதிகாரியாக ரஜினியின் மைத்துனரும் (மனைவி லதாவின் சகோதரர்) முன்னாள் நடிகருமான ரவி ராகேந்திரா இருந்து வரும் தகவல் தற்போது வெளியாகி உள்ளது. இவர் பிரபல இசை அமைப்பாளர் அனிருத்தின் தந்தையும் ஆவார். இவர் வங்கியின் கவுரவ இயக்குனர்களில் ஒருவராகவும் இருந்து வருகிறார்.

ஏற்கனவே யெஸ் வங்கியின் சொத்து தொடர்ந்த கடந்த 2015-ம் ஆண்டே மத்திய ரிசர்வ் வங்கி பரிசீலித்ததாகவும், கடந்த 2016 – 17 நிதி ஆண்டில் ஆர்பிஐ கணக்குப் படி 8,373 கோடி ரூபாய் வாராக் கடனாக இருந்தாகவும், ஆனால் யெஸ் வங்கி வெறும் 2,018 கோடியை மட்டுமே வாராக் கடனாக கணக்கு காட்டியது என்றும், சுமார் 6,355 கோடி ரூபாய் வாரா கடனை கணக்கில் காட்ட வில்லை என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதை ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளாமல் விட்டது ஏன் என்றும் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

அதுபோல யெஸ் வங்கி வைரம் போன்றது என்று கூறி வந்த  ரானா கபூர் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தன்னிடம் உள்ள வங்கியின்  900 பங்குகள் போக மீதமுள்ள எல்லா பங்குகளையும் விற்றுவிட்டார். ஆனால்,  இதையும் ரிசர்வ் வங்கி கண்டுகொள்ளவில்லை என்று கூறப்படுகிறது.

பெரும் நிறுவனங்களுக்கு கோடிக்கணக்கில் அள்ளிக்கொடுத்து, அதை வாராக்கடன்களாக அறிவித்து, இன்று வங்கியும் திவாலாகும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், சாமானிய மக்கள் தாங்கள் சிறுக சிறுக சேமித்த பணம் என்னவாகுமோ என்று பயத்தில் பரிதவித்து வருகின்றனர்….

இதுபோன்ற சூழலில்தான் யெஸ் வங்கியின் தமிழக தலைமை அதிகாரியாக ரஜினிகாந்தின் மைத்துனர் இருந்து வருவது தெரிய வந்துள்ளது…. தமிழகத்திலும் யெஸ் வங்கிக்கு சென்னை உள்பட 14 மாவட்டங்களில் கிளைகள் உள்ளது. இந்த கிளைகளில் பெரும் நிறுவனங்கள் உள்பட சாமானிய மக்கள் வரை டெபாசிட் செய்துள்ளனர்.

தமிழகத்திலும் பல பெரும் நிறுவனங்களுக்கு யெஸ் வங்கி கடன் வழங்கி உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் திரையுலகைச் சேர்ந்த பல தயாரிப்பு நிறுவனங்களுக்கும் கோடிக்கணக்கில் கடன் வழங்கப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது….

பொதுவாக  ஒரு வங்கியில் கோடிக்கணக்கான ரூபாய் கடன் பெற வேண்டுமானால், வங்கியின் தலைமை அலுவலகத்தில், தலைமை அதிகாரியின் ஒப்புதல் பெற வேண்டும். அதன்படி பல கோடிக்கணக்கான ரூபாய் கடன் யெஸ் வங்கியின் தமிழக தலைமை அதிகாரி ரவி ராகவேந்தருக்கு தெரிந்தே வழங்கப்பட்டிருக்க வாய்ப்பு உள்ளது.

தமிழகத்திலும், யெஸ் வங்கி எத்தனை பெரும் நிறுவனங்கள், சினிமா தயாரிப்பு நிறுவனங்களுக்கு  எத்தனை கோடி கடன் வழங்கியுள்ளது,  அதில் எவ்வளவு வசூல் செய்யப்பட்டு உள்ளது, வாராக்கடன் எவ்வளவு? ரஜினி, தனுஷ் போன்றோர் நடித்துள்ள படத்தயாரிப்பு நிறுவனங்களுக்கு கடன் வழங்கப்பட்டு உள்ளதா?  வாராக்கடன் விவகாரத்தில் ரஜினியின் மைத்துனர் பங்கு என்ன என்பதும்  விசாரணையின் முடிவில்தான் தெரிய வரும்…

பெரும் தலைகள் அனைத்தும் கடன் குறித்து கவலைப்படாமல்  நிம்மதியாக குறட்டை விடும் நிலையில்,  வங்கியில் டெபாசிட் செய்துள்ள நடுத்தர வர்க்கத்தினர்தான்  தங்களது வாயிலும், வயிற்றும் அடித்துக்கொண்டு அழுகின்றனர்….

மோடி தலைமையிலான பாஜக அரசு கடந்த 2014ம் ஆண்டு பதவி ஏற்றது முதல்,  இந்திய பொருளாதாரம் சரிவை நோக்கி சென்றுகொண்டிருகிறது. இதனால், நாட்டின் வேலை வாய்ப்பின்மை அதிகரித்து வருகிறது. மக்கள் பெரும் துன்பங்களுக்கு ஆளாகி வருகின்றனர்….

ஏற்கனவே பணமதிபிழப்பின்போதும், சாமானிய மக்களே கொடுமையை அனுபவித்து வந்த நிலையில், அது குறித்து  மோடி அரசும், நிதித்துறையும், ரிசர்வ் வங்கியும் கண்டுகொள்ளாமல் இருந்து வந்தது…  ஆனால், பெரு நிறுவனங்களோ தங்களது கருப்பு பணத்தை வெள்ளையாக்கி மேலும் மேலும் கொள்ளை லாபம் சம்பாதித்து வருகிறது…

அதுபோலவே, தற்போது யெஸ் வங்கியின் வாராக்கடன் குறித்து, கடந்த சில ஆண்டுகளாக  கண்டுகொள்ளாத ரிசர்வ் வங்கியும், தற்போது தான் தூங்கி விழித்துள்ளது…. யெஸ் வங்கி முறைகேடு  குறித்து இன்று விசாரணைக்கு உத்தரவிட்டுள்ள ரிசர்வ் வங்கி கடந்த 2015ம் ஆண்டே உஷாராக இருந்திருந்தால் இதுபோன்ற நிலை உருவாகியிருக்காது என்று பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.

yes வங்கி தொடர்பான மேலும் பல தகவல்கள் அறிய கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்… 

https://www.patrikai.com/yes-bank-gets-1-2-billion-binding-offer-from-a-global-investor/

https://www.patrikai.com/yes-bank-which-hits-the-customers-stomach-yesbank-has-sponsored-pm-modi-will-be-talking-at-global-business-summit-etgbs-on-economic-situation-of-india/

https://www.patrikai.com/yes-bank-in-bankruptcy-situation/

https://www.patrikai.com/yes-bank-congress-raised-questions-to-central-govt/