“ரஜினிகாந்த் அரசியலுக்கு வர போவதில்லை எனும் முடிவு ஆச்சர்யம் அளிக்கிறது” : இயக்குநர் பா.ரஞ்சித்

டிசம்பர் 31ஆம் தேதி கட்சி குறித்து அறிவிப்பு, மதுரையில் மாநாடு, தேர்தல் ஆணையத்தில் சின்னம் கோரிக்கை என்று ஏகப்பட்ட எதிர்பார்ப்பு ஏற்படுத்திய ரஜினி அரசியலுக்கு வரும் முடிவை கைவிட்டார்.

உடல்நிலையை கருத்தில் கொண்டு அரசியலுக்கு வரவில்லை, ரசிகர்கள், மக்கள் என்னை மன்னியுங்கள் என்று தெரிவித்துள்ளார்.

இதற்கு பல தரப்பினரும் கருத்து கூறி வருகின்றனர் .

இந்நிலையில் ரஜினி இப்படி அறிவித்தது ஆச்சர்யம் அளிப்பதாக இயக்குநர் பா.ரஞ்சித் கூறியுள்ளார். காலா படப்பிடிப்பின் போதே ரஜினி கட்சி தொடங்குவது குறித்து அத்தனை திட்டங்களையும் வைத்திருந்தார் என்றும், இப்போது அவர் இப்படி அறிவித்திருப்பது ஆச்சர்யம் அளிப்பதாக கூறியுள்ளார்.

 

You may have missed