ரஜினியின் புதிய படம்: நடிகர் தனுஷ் – இயக்குநர் ரஞ்சித் மோதல்?

டிகர் ரஜினியை வைத்து இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கும் புதிய படத்தை, நடிகர் தனுஷ் தயாரிக்கிறார். இப்படம் குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகி, முதற்கட்ட பணிகள் நடக்க ஆரம்பித்திருக்கின்றன.

இப்போதே “தயாரிப்பாளரான நடிகர் தனுஷூக்கும், இயக்குநர் பா.ரஞ்சித்துக்கும் பிரச்சினை ஆரம்பித்துவிட்டது” என்று கோலிவுட்டில் முணுமுணுப்பு கேட்கிறது.

இது குறித்து கூறப்படுவதாவது:

தனுஷ் இசையமைப்பாளர் ஷான் ரோல்டனுக்கு தனது படங்களில் இசையமைக்க வாய்ப்பு அளித்து வருகிறார். ஆகவே தனது தயாரிப்பில் உருவாகும் இந்த படத்துக்கும் அவரே இசை  அமைக்க வேண்டும் என்று விரும்பினார்.

ஆனால் படத்தின் இயக்குநரான ரஞ்சித், தான் தொடரந்து இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணனுடம் பணி புரிந்து வருவதாகவும் அதுதான் தனக்கு சரிவரும் என்றும் சொல்லிவிட்டார்.

இது தனுஷூக்கு வருத்தம்.

அடுத்ததாக, இன்னொரு விவகாரமும் வெடித்தது.

தனது மாமனாரும் சூப்பர் ஸ்டாருமான ரஜினி படத்தில் கெஸ்ட் ரோலில் ஒரு காட்சியிலாவது தலைகாட்டிவிட வேண்டும் என்பது தனுஷின் விருப்பம்.

இதை ரஞ்சித்திடம் சொல்லியிருக்கிறார் தனுஷ்.

ஆனால் ரஞ்சித்தோ, “கதைப்படி  உங்களுக்கேற்ற கேரக்டர் எதுவும் இல்லை. உங்களுக்காக கதையையும் மாற்ற முடியாது” என்று சொல்லிவிட்டார்.

இந்த இரு விவகாரங்களால் அப்செட் ஆன தனுஷ், “இனி பட விவகாத்தில் தலையிடப்போவதில்லை” என்று தனக்கு நெருங்கியவர்களிடம் வெடித்திருக்கிறார்.

இது ரஞ்சித் காதுக்குச் சென்றிருக்கிறது. அவர், “ரொம்ப நல்லது” என்று கிண்டலாகச் சொல்லியருக்கிறார்.

இதை அங்கே சொல்லவும் ஆட்கள் இருப்பார்கள் அல்லவா… அப்படி தனுஷ் காதுக்கு விசயம் போக.. வெடித்துவிட்டார் மனிதர்.

“நான் வெறும் நடிகன் மட்டுமல்ல. இயக்குநரும்கூட” என்று குமுறிவிட்டாராம் தனுஷ்.

பட நாயகன் ரஜினியோ, வழக்கம்போல கண்டும் காணாமல் இருக்கிறாராம்.

ஆக, இந்த மோதல் எங்குபோய் முடியுமோ என்று டென்சனில் இருக்கிறது புதிய படத்தின் குழு.