சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெறும் ‘காலா’ இசை வெளியீட்டு விழா!


ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள ‘காலா’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னை ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது.

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘காலா’. இந்தப் படத்தை தனுஷ் தயாரிக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா வரும் 9ம் தேதி சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற இருக்கிறது.  படம் வரும் ஜூன் மாதம் 7ஆம் தேதி வெளியாக இருக்கிறது. .

சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் பிரமாண்டமாக ‘காலா’ படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற இருப்பதாக  தயாரிப்பு நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த விழாவில் ரஜினிகாந்த் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொள்ள இருக்கிறார்கள். . மேலும் இந்த விழாவை பொதுமக்கள் பார்க்கும் வகையில் நேரடியாக ஒளிபரப்பவு இருக்கிறார்கள். .