ரஜினி நடித்த ‘காலா’ ஜூன் 7ம் தேதி ரிலீஸ்….அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை:

ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படம் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தினர் நடத்தி வந்த வேலை நிறுத்த போராட்டம் காரணமாக புதிய திரைப்படங்கள் திரைக்கு வருவது நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த வரிசையில் ரஜினிகாந்த் நடித்த காலா திரைப்படமும் வெளியாகும் தேதி அறிவிக்கப்படாமல் இருந்தது.

இதைத் தொடர்ந்து தமிழக அரசு நடத்திய முத்தரப்பு பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு வேலைநிறுத்த போராட்டம் விலக்கி கொள்ளப்பட்டது. இதைதொடர்ந்து காலா திரைப்படம் வரும் ஜூன் 7ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.