ரஜினி.யின் ‘காலா’ டப்பிங் பணி தொடக்கம்…ஆகஸ்ட்டில் ரிலீஸ்

ஜினி நடித்துள்ள ‘காலா’ படத்தின் டப்பிங் பணி இன்று சென்னையில் தொடங்கியது.

‘கபாலி’ படத்தை தொடர்ந்து ரஜினி, இயக்குனர் ரஞ்சித் இணைந்து ‘காலா’ படத்தை உருவாக்கி வருகின்றனர்.  இப்படத்தின் தயாரிப்பாளர் நடிகர் தனுஷ். சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார்.மேலும், இதில் சமுத்திரகனி, நானா படேகர், சம்பத், சாயாஜி ஷிண்டே, அருள்தாஸ், ஹூமா குரேஷி, வத்திக்குச்சி திலீபன், அரவிந்த் ஆகாஷ், சுதான்ஷூ பாண்டே, ஈஸ்வரிராவ், சாக்ஷி அகர்வால் என பலரும் நடித்து வருகின்றனர். .

படிப்பிடிப்பு பணிகள் முடிந்த நிலையில் தயாரிப்பக்கு பிந்தய பணிகள் ஜரூராக நடக்க தொடங்கியுள்ளது. இந்த வகையில் டப்பிங் பணிகள் இன்று தொடங்கியது. சென்னை நாக் ஸ்டூடியோவில் இன் காலை பூஜையுடன் டப்பிங் பணி தொடங்கியது. இதில் இயக்குநர் ரஞ்சித் உள்ளிட்ட காலா படக்குழுவை சேர்ந்த பலர் கலந்துகொண்டனர். வரும் ஆகஸ்ட்டில் இப்படம் ரிலீசாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.