விரைவில் தனியாகக் கட்சித் தொடங்குவதற்காக ஆயத்தப் பணிகளை நீண்ட காலமாகக் கவனித்து வருகிறார் ரஜினி.

சிவா இயக்கத்தில் உருவாகும் படத்தைத் தொடர்ந்து நடிக்கவுள்ள படம் தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும் என அவரின் நெருங்கிய வட்டாரம் கூறி வருகிறது

“அடுத்தாண்டு பொங்கலுக்கு வெளியாகும் படம் தான் ரஜினியின் கடைசிப் படமாக இருக்கும்” என்று சமீபத்தில் தமிழருவி மணியன் தெரிவித்திருந்தார் .

ரஜினியின் திரையுலக வாழ்க்கை கமலுடன் நடித்துத் தொடங்கி அவரது கடைசிப் படத்தையும் கமலின் ராஜ்கமல் நிறுவனத்துக்காகச் செய்யவுள்ளார் ரஜினி. இந்தத் தகவல் இணையத்தில் வெளியானதைத் தொடர்ந்து, பலரும் ஆச்சரியத்துடன் பகிர்ந்து வருகிறார்கள்.