ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘பேட்ட’…இன்று அறிவிப்பு

சென்னை:

ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படத்தின் பெயர் ‘பேட்ட’ என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் 165-வது படத்தை இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கி வருகிறார். ரஜினியின் 165-வது படத்துக்கான பெயர் ‘பேட்ட’ என்று இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதை மிக பிரமாண்டமாக தயாரித்து வரும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தின் மோசன் போஸ்டர், டைட்டிலை ட்விட்டரில் வெளியிட்டது.

ரஜினிகாந்த்தின் பேட்ட படத்தில் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார் ரஜினிக்கு ஜோடியாக சிம்ரன், த்ரிஷா ஆகியோர் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.

ரஜினியுடன் இணைந்து பாலிவுட் நடிகர் நவாஸுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம், ராம்தாஸ், ராமச்சந்திரன் என பலர்இந்தப் படத்தில் நடிக்கின்றனர். படத்தின் ஷூட்டிங், டேராடூன், டார்ஜிலிங், சென்னை ஆகிய இடங்களில் நடைபெற்றுள்ளது. இதைத் தொடர்ந்து லடாக், ஐரோப்பா ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Rajini's new film title ‘petta’ today announced, ரஜினி நடிக்கும் படத்தின் பெயர் ‘பேட்ட’...இன்று அறிவிப்பு
-=-