சன் பிக்சர்சின் ரஜினி படத்தை இயக்க ஏர்.ஆர்.முருகதாசுக்கு பலகோடி கூடுதல் சம்பளம்…..

ன் பிக்சர்ஸ் சார்பில், ரஜினியின் அடுத்த படத்தை இயக்க பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாசுக்கு,சர்க்கார் படத்திற்கு கொடுக்கப்பட உள்ள சம்பளத்தை விட  பல கோடி கூடுதல் சம்பளம் கொடுக்க  தயாரிப்பு நிறுவனமான சன்பிக்சர்ஸ் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அரசியலுக்கு வருவதாக கூறிக்கொண்டே ரஜினி படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பேட்ட படத்தில் நடித்து வரும் ரஜினி, அடுத்த படத்திலும் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

பிரபல இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள 2.0 படம்  நவம்பர் 29-ம் தேதி வெளியாக தயார் நிலையில் உள்ளது.  தற்போது சன் பிக்சர்ஸ் படமான பேட்ட படத்தில் ரஜினி நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு  லக்னோவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இறுதிக்கட்ட படப்பிடிப்பு மதுரை பகுதியில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தை தொடர்ந்து அடுத்து நடிக்க இருக்கும் புதிய படத்திற்கும்,  சன் டிவி  நிறுவனத்துக்கே ரஜினி கால்ஷீட் கொடுத்திருக்கிறார் .

தற்போது சன் டிவி தயாரிப்பில்,  பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் நடிகர் விஜயை வைத்து, சர்க்கார் படம் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் முடிவடைய உள்ள நிலையில், அடுத்த படத்தை இயக்க சன் டிவி நிறுவனத்திற்கே ஒப்பந்தமாகி உள்ளார்.

ரஜினியை வைத்து இயக்க உள்ள ஏ.ஆர்.முருகதாசின் படம் அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. ரஜினி நடிப்பில்  சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் மூன்றாவது படம் இது. அதுபோல,  ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இரண்டாவது படம் இது.

இந்த படத்திற்காக ஏஆர்.முருகதாசுக்கு,  சர்கார் படத்தில் வாங்கிய சம்பளத்தைவிட, பல கோடி கூடுதலாக சம்பளம் வழங்கப்பட இருப்பதாக கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி