சென்னை:

ஜினி தனி நபர், அவரது கருத்து, சொந்த கருத்து என்று,  தமிழ்நாட்டின் பாரதிய ஜனதா கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் வானதி சீனிவாசன் கூறி உள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த ரஜினியிடம், திருவள்ளுவர் சிலைக்கு காவி பூசப்பட்டது குறித்து, செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்த ரஜினி, தனக்கு பாஜக காவிகலர் பூச முயற்சி செய்வதாகவும், அதில் நான் சிக்க மாட்டேன் என்று கூறினார்.

இது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், தமிழக அரசியல் கட்சிகள் ரஜினியின் கருத்துக்கு வரவேற்பு தெரிவித்தனர். பின்னர் ஒரு மணி நேர இடைவெளியில், தனது கருத்தை மாற்றி கூறியிருந்தார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த தமிழக பாஜக துணைத்தலைவர் வானதி சீனிவாசன், ரஜினி தனது கருத்தை சொல்லியிருக்கிறார். அவரது கருத்து சிலநேரம் எங்களுக்கு ஆதரவாகவும், சில நேரம் எதிராகவும் அமைந்திருக்கிறது. அவர் ஒரு தனி நபர், அவருடைய கருத்துக்களை சொந்த கருத்தமாக மட்டுமே பார்க்க வேண்டும் என்று தெரிவித்து உள்ளார்.

அதுபோல  ரஜினிகாந்த் பாஜகவில் சேருவார் என நாங்கள் ஒருபோதும் சொல்ல வில்லையே என்று பாஜக தமிழக பொறுப்பாளர்  முரளிதரராவ் கூறி உள்ளார்.