ரஜினியின் ‘பேட்ட’ டிரெய்லர் 28ந்தேதி வெளியீடு: படக்குழு அறிவிப்பு

ஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டிரெய்லர் வரும் 28ந்தேதி (நாளை மறுதினம்) வெளியாகும் என படத்தயாரிப்பு குழுவான சன் பிக்சர்ஸ் அறிவித்து உள்ளது.

பேட்ட படத்தின் பாடல்கள் வெளியாகி பலத்த வரவேற்பு பெற்றுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் நாளை மறுதினம் (28ந்தேதி) வெளியாகி உள்ளது. படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,   கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் “பேட்ட”. இதில்,  ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா, சிம்ரன் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்துள்ளனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துருக்கிறார்.

பேட்ட படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்ட பணிகள் முடிந்துள்ள நிலையில் பொங்கலுக்கு திரைக்கு வர தயாராக உள்ளது. முன்னதாக பேட்ட திரைப்படத்தின் பாடல்கள் வெளியான நிலையில் இத்திரைப்படத்தின்டிரெய்லர் வரும் டிசம்பர் 28-ம் நாள் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.