ரஜினியின் ‘பேட்ட’ டிரெய்லர் வெளியானது…. (வீடியோ)

ஜினிகாந்த் நடித்துள்ள பேட்ட திரைப்படத்தின் டிரெய்லர்  28ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இன்று படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.

ஏற்கனவே  பேட்ட படத்தின் பாடல்கள் வெளியான நிலையில், படத்தின் டிரெய்லர் இன்று வெளியிடப்பட்டு உள்ளது. பொங்கலுக்கு படம் வெளியாவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,   கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தல் நடிகர் ரஜினிகாந்த நடித்துவரும் திரைப்படம் “பேட்ட”. இதில்,  ரஜினிக்கு ஜோடியாக த்ரிஷா, சிம்ரன் நடித்துள்ளனர். மேலும், விஜய் சேதுபதி, சசிகுமார், நவாசுதீன் சித்திக், பாபி சிம்ஹா, சனந்த் ரெட்டி, மேகா ஆகாஷ், குரு சோமசுந்தரம் ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்துள்ளனர்.  இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துருக்கிறார்.

ரஜினி படத்தின் டிரெய்லரை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…