ரஜினி அரசியல் பிரவேசம் தலித்துகளுக்கு பேராபத்து!: வி.சி.க. ரவிக்குமார்

சென்னை,

ஜினி ரசிகர்களை சந்திக்கும் நிகழ்ச்சி சென்னை ராகவேந்திர மண்டபத்தில் நேற்று முதல் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நேற்று  ரசிகர்களுடனான கூட்டத்தில் பேசிய ரஜினி அரசியல் குறித்து வரும் 31ந்தேதி அறிவிப்பேன் என்று கூறினார். மேலும், அரசியல் தனக்கு புதிதல்ல… 1996லேயே அரசிலில் இருக்கிறேன். அரசியலில்  கஷ்ட நஷ்டங்கள் தெரிந்ததால் வர தயங்குகிறேன் என்று கூறியிருந்தார்.

அவரது அரசியல் குறித்த அறிவிப்புக்கு தமிழக அரசியல் கட்சியினர் பாராட்டும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் விசிக முன்னாள் எம்எல்ஏவான ரவிக்குமார் தனது முகநூல் பக்கத்தில், ரஜினியின் அரசியல் பிரவேசம் தலித்துக்களுக்கு பேராபத்தாக முடியும் என்று கூறி உள்ளார்.

இதுகுறித்து அவர் தனது முகநூலில் பதிவிட்டிருப்பதாவது,

ரஜினியின் அரசியல் பிரவேசம் தலித் மக்களுக்கு பேராபத்தாக முடியும் ஏழை எளிய மக்களின் காவலராகத் திரையில் தோன்றிய எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் தமிழ்நாட்டில் அரசியல் பலம்பெற்றது ஒடுக்கப்பட்ட மக்கள் அல்ல என்பதை மறந்துவிடக்கூடாது.

ரஜினியின் நேற்றைய பேச்சு அரசியலை அவர் இன்னொரு சினிமா ப்ராஜெக்டாகவே பார்க்கிறார் என்பதைத்தான் காட்டுகிறது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.