ரஜினி அரசியல் பிரவேசம்: இலங்கை வடக்கு மாகாண முதல்வர் ஆதரவு!

யாழ்ப்பாணம், 

ஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேச அறிவிப்புக்கு இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன் ஆதரவு தெரிவித்து உள்ளார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 31ந்தேதி ரஜினி தான் அரசியலுக்கு வருவதாகவும், அது ஆன்மிக அரசியல் என்றும் கூறியிருந்தார். அவரது அறிவிப்புக்கு முதன்முதலாக வாழ்த்து கூறியது, இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சேவின் மகன். இது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில்,  இலங்கை வடக்கு மாகாண முதல்வர் விக்னேஸ்வரன், நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்,  ரஜினிகாந்தின் ஆன்மிக அரசியல் பிரவேசத்துக்கு தான் எப்போதும் ஆதரவு அளிப்பேன் என்றார்.