Random image

‘சோபியா’, குட்கா ரெய்டு குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து ரஜினி ‘எஸ்கேப்’

சென்னை:

ரசியல் கட்சி தொடங்கப்போவதாக தமிழக மக்களிடமும், தனது ரசிகர்களிடமும் கூறி வரும் ரஜினி, தமிழகத்தில் தற்போது  நடைபெற்று வரும் பிரச்சினைகள் குறித்து கருத்து கூற மறுத்துவிட்டார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விமானத்தினுள் பயணம் செய்த தமிழக பாஜ தலைவர் தமிழிசையை பார்த்து, அதே விமானத்தில் பயணம் செய்த சோபியா என்ற இளம்பெண்  ‘பாசிச பாஜக ஒழிக’ என கோஷமிட்டார். இது சலசலப்பை ஏற்படுத்தியது. அதைத்தொடர்ந்து விமான நிலைய காவல்துறையில் புகார் கூறப்பட்டதன் எதிரொலியாக சோபியா கைது செய்யப்பட்டு தற்போது ஜாமினில் உள்ளார்.

சோபியா கைது செய்யப்பட்டது குறித்து நடிகர் கமல் உள்பட  அனைத்து அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர்.

இந்த நிலையில் இன்று சென்னை விமான நிலையம் வந்த நடிகர் ரஜினியிடம் செய்தியாளர்கள் இதுகுறித்து கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளிக்க ரஜினி மறுத்து விட்டார். அதைத்தொடர்ந்து தமிழகத்தல் குட்கா ஊழல் சம்பந்தமாக கடந்த 2 நாட்களாக நடைபெற்று வரும் சிபிஐ சோதனை குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கும் பதில் அளிக்க மறுத்து, செய்தியாளர்களிடம் இருந்து எஸ்கேப்பானார் ரஜினி. இது செய்தியாளர்கள் மட்டுமல்லாது அனைவருக்கும் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

அரசியலுக்கு வருவதாக கூறி உள்ள ரஜினி தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். இடையிடையே தனது ரசிர்களை வரவழைத்து  அரசியல் குறித்து பேசி உசுப்பேத்தி வரும் ரஜினி, முக்கியமான நிகழ்வுகள், சம்பவங்கள் குறித்து கருத்து தெரிவிக்க மறுத்து வருவது தமிழக மக்களிடையே வெறுப்பை ஏற்படுத்தி வருகிறது.