“காலா” வழக்கில் ரஜினி பதில் மனு

1996ம் ஆண்டு தான் பதிவு செய்து வைத்த “கரிகாலன்” என்ற பெயரை, ரஜினியின் படத்துக்கு பயன்படுத்திவிட்டார்கள்.

அந்த பெயரை அவர்கள் பயன்படுத்தக்கூடாது” என்று ராஜசேகரன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்திருந்தார்.

இதற்கு இன்று ரஜினி, இயக்குநர் பா.ரஞ்சித் மற்றும் தயாரிப்பு நிறுவனத்தினர் பதில் மனு தாக்கல் செய்தனர்.

அதில், “காலா படத்தின் பெயரை நாங்கள்தான் பதிவு செய்திருக்கிறோம். ராஜசேகரன் என்பவர் சுயவிளம்பரத்துக்காக வழக்கு தொடுத்திருக்கிறார்” என்று தெரிவித்துள்ளனர்.