ரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானது! குருமூர்த்தி டுவிட்

சென்னை,

60 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழகத்தை ஆண்டு வரும் திராவிட கட்சிகளின் அரசியலை, ரஜினியின் அரசியல் என்ட்ரி ஆட்டம் காண வைக்கும் என்றும், ரஜினியின் ஆன்மிக அரசியல் மோடிக்கு நெருக்கமானது என்றும் துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி டுவிட்  செய்துள்ளார்.

கடந்த ஆண்டு இறுதியில் நடிகர் ரஜினி, தனது ரசிகர்களுடனான சந்திப்பின்போது தமிழகத்தில் சிஸ்டம் கெட்டுபோய் விட்டது என்றும், தான் புதிதாக அரசியல் கட்சி தொடங்கி,  அடுத்த சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டியிடப் போவதாக நேற்று (டிசம்பர் 31)   அறிவித்தார். தனது அரசியல் ஆன்மிக அரசியல் என்றும் கூறி இருந்தார்.

அவரது அரசியல் குறித்த கருத்துக்கு அரசியல் கட்சியினர் இடையே ஆதரவும், எதிர்ப்பும் தெரிவிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில்,  ‘துக்ளக்’ இதழின் ஆசிரியர் ஆடிட்டர் குருமூர்த்தி, ரஜினியின் அரசியல் பிரவேசம் குறித்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அதில், தமிழகத்தில் கடந்த அறுபது ஆண்டுகளாக உறைந்து கிடைக்கும் திராவிட அரசியலை ஆட்டம் காண வைக்கும் வகையில் ரஜினியின் அரசியல் பிரவேசம் அமைந்துள்ளது என்று நம்பலாம்.

தமிழகத்திலும் சரி அல்லது அதற்கு வெளியேயும் சரி, ‘ஆன்மீக அரசியல்’ என்ற ரஜினியின் கருத்தாக்கமானது பிரதமர் மோடியின் அரசியலுக்கு நெருக்கமானதாக அமைந்துள்ளது.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

குருமூர்த்தியின் டுவிட்டை பார்க்கும்போது, ரஜினியின் ஆன்மிக  அரசியலுக்கு பாரதியஜனதா பின்புலமாக செயல்படுவது வெட்டவெளிச்சமாகி உள்ளது.

 

கார்ட்டூன் கேலரி