ரஜினியை அரியணையில் ஏற்றாமல் போகிறேனே.. என வருந்திய ரசிகர் உயிர் பிழைத்தார்..

தர்ஷன் என்ற பெயரில் வந்திருக்கும் ரஜினி ரசிகரின் ஒரு டிவிட்டர் மெசேஜை சூப்பர் ஸ்டார் ரஜினியின் ரசிகர்கள் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.
அந்த மெஸேஜில் கூறியிருப்ப தாவது:
ரஜினிகாந்த் தலைவா, என் இறுதி ஆசை. 2021 தேர்தலில் வெற்றி பெற்று தமிழ மக்களுக்கு மிகச் சிறந்த தலைவனா கவும், தந்தை மற்றும் ஆன்மீக குருவாகவும் வீரநடைபோட்டு அடித்தட்டு கிராம மக்களின் தனிநபர் வருமானம் 25கே என்ற நிலை உருவாக்கி கொடு. உன்னை அரியணையில் ஏற்ற பாடுபடாமல் போகிறேனே என்ற வருத்தம்..


இவ்வாறு சில வாரங்களுக்கு முன் பதிவிட்டிருந்தார் தர்ஷன்.
தற்போது அவர் வெளியிட்டுள்ள புதிய மெசேஜில் கூறியிருப்பதாவது:
ரஜினிகாந்த் ஆசிர்வாதம் கிடைத்தது. அதிசயம் நடந்தது. அற்புதம் நிகழ்ந்தது. கொரோனா நெகடிவ் வந்தது. தலைவர் காவலர்களின் பிரார்த்தனையால் எனது கிட்னியும் சரி ஆகி மீண்டும் பழைய நிலைக்கு வருவேன். உங்கள் பிரார்த்தனைக்கு நன்றி.
இவ்வாற் 2வது மெசேஜில் கூறி உள்ளார்.
ரஜினி ரசிகர் தர்ஷன் என்ற முரளியின் இந்த டிவிட் மெசேஜை ரசிகர்கள் நெட்டில் டிரெண்டிங் செய்து வருகின்றனர்.