Random image

காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்திக்கு ராஜீவ்கொலை வழக்கு கைதி நளினி நன்றி

சென்னை:

ங்களது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ராகுல்காந்திக்கு, ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினி நன்றி தெரிவித்து உள்ளார்.

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியின் கொலை வழக்குகளில் சிக்கி கடந்த 27 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடும் கைதிகளை விடுவிப்பது குறித்து தமிழக அரசு முடிவெடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அதைத் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள கைதிகள் 7 பேரும் விரைவில் விடுதலை ஆவார்கள் என நம்பப்படுகிறது.

இந்த நிலையில் ராஜீவ் கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான நளினி கூறியிருப்பதாவது,  உச்சநீதிமன்ற முடிவால் விரைவில் சிறையில் இருந்து விடுதலை ஆவேன் என்றும், மகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாகதெரிவித்துள்ளார்.

தங்களது விடுதலைக்கு எதிர்ப்பு தெரிவிக்காத ராகுல் காந்திக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவித்து உள்ளார்.

உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி தங்களை விடுதலை செய்ய விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு நளினி கோரிக்கை வைத்துள்ளார். இந்த விவகாரத்தில் மத்திய அரசு அனுசரணையாக நடந்துகொள்ள கடவுளை வேண்டுவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும்,  28 ஆண்டுகால சிறை தண்டனையின்போது ஏற்பட்டட அனைத்து வலிகளையும் மறக்கவே விரும்புவதாக கூறி உள்ள நளினி, விடுதலைக்கு பிறகு மகளுடன் சேர்ந்து மகிழ்ச்சியாக வாழ விரும்புவதாக தெரிவித்துள்ளார். தங்களது விடுதலைக்காக திருமணம் செய்யாமல் மகள் காத்திருப்பதாக கூறிய நளினி,  தமது மகளின் திருமணத்திற்கு மத்திய, மாநில அரசுகள் உதவும் என்றும்,  தானும் தனது கணவரும் விடுதலைக்கு பின் மகளோடு நிம்மதியாக இருப்போம், அதுவே தனது விருப்பம் என்றும் கூறி உள்ளார்.