Random image

உச்சநீதி மன்ற தீர்ப்பு: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் வரவேற்பு

சென்னை:

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை கைதிகளான பேரறிவாளன் உள்பட 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து தமிழகஅரசு முடிவு எடுக்கலாம் என்று உச்சநீதி மன்றம் இன்று சிறப்புமிக்க தீர்ப்பு வழங்கி உள்ளது.

இந்த தீர்ப்பை வரவேற்பாக பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார். அதைத் தொடர்ந்து நாளை தமிழக முதல்வரை சந்தித்து முறையிட இருப்பதாகவும், அப்போது தன்னுடன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினியின் தாயார் பத்மாவும் வர இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ராஜீவ்காந்தி கொலை குற்றத்திற்காக தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் 7 பேரும்  27 ஆண்டுகளாக ‘தண்டனை அனுபவித்து வருகின்றனர்.  அவர்களை கருணை அடிப்படையில் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு முடிவு செய்து முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால், அவர்களை விடுதலை செய்ய மாநிலக அரசுக்கு உரிமை இல்லை, மத்திய அரசுக்கு மட்டும் உள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணையின் போது ஏழு பேரின் விடுதலை குறித்து விளக்கம் அளித்த மத்திய அரசு, அவர்களை விடுதலை செய்ய முடியாது. நாட்டின் பிரதமரை படுகொலை செய்தவர்களை விடுதலை செய்தால், அது சர்வதேச ரீதியாகவும், அபாயகரமான செயலுக்கு முன்னுதாரணமாக அமைந்து விடும் என்றும்,  இதுகுறித்து ஏற்கனவே தமிழக அரசுக்கு தெளிவுபடுத்தப் பட்டது என மத்திய அரசு கூறியுள்ளது.

இதுதொடர்பான வழக்கில், மத்திய மாநில  அரசின் வாதங்களை ஏற்ற நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் வழக்கு விசாரணை ஒத்திவைத்தனர்.

இதனையடுத்து இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் கைது செய்யப்பட்ட ஏழு கைதிகளை விடுதலை செய்ய தமிழக ஆளுநருக்கு அதிகாரம் உண்டு, இவர்களின் விடுதலைக்கு தமிழக அரசிடம் ஆளுநர் பரிந்துரைக்கலாம் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.