7பேர் விடுதலையில் ஆளுநரின் தாமதம் எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் முறையிடலாம்: முன்னாள் நீதிபதி கருத்து

சென்னை:

ராஜீவ் கொலை வழக்கு குற்றவாளிகளை விடுதலை செய்யலாம் என்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ள நிலையில், ஆளுநர் அதற்கான கோப்பில் கையெழுத்திடாமல் இழுத்தடித்து வருகிறார்.

இது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், 7 பேர் விடுதலை விவகாரத்தில் ஆளுநர் தாமதிப்பது சரியானதல்ல, இதை எதிர்த்து உச்சநீதி மன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யலாம் என்று முன்னாள்  நீதிபதி கற்பகவிநாயகம் தெரிவித்து உள்ளார்.

நிகழ்ச்சி ஒன்றில் பேசிய முன்னாள்  ஜார்க்கண்ட் உயர்நீதி மன்ற நீதிபதி கற்பகவிநாயகம் , ராஜீவ் கொலை வழக்கு கைதிகளை விடுதலை செய்ய தமிழகஅமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி அனுப்பப்பட்டு உள்ள நிலையில், அந்த கோப்பில் கையெழுத்திடாமல் ஆளுநரின் காலதாமதம் செய்து சரி அல்ல என்றார். மேலும், ஆளுநரின் தாமதத்தை எதிர்த்து,  உச்சநீதிமன்றத்தில் முறையிடலாம் என்றும் கூறி உள்ளார்.